வாழ்த்து - சண்டீசர் துதி

ஆவின் பெருமை அறைந்தார் அடி போற்றி
    நிரைகாக்க வந்தார் நிறைமலர்தாள் போற்றி
திருமேனி சிவாலயம் செய்தமைத்தார் தாள் போற்றி
    முன்னைசெய் சிவபூசை முற்றுவித்தார் தாள் போற்றி
தந்தைதாள் வீசிய சண்டேசர் தாள் போற்றி
    தொண்டர்கதிபனாம் தூயோன் தாள் போற்றி
அரனார் மகனராய் அமர்ந்தோன் அடி போற்றி
    களிப்புக்கை கொட்டுதலை காண்போன் அடி போற்றி.

Comments