முதலாழ்வார்கள் பாசுரங்கள் - திருக்கோவிலூர்

முதலாழ்வார்கள் பாசுரங்கள்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்யகதிரோன் விளக்காக – செய்ய
சுடராழியானடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி, நீங்குகவேயேன்று.

பொய்கையாழ்வார்

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தையிடு திரியா – நன்புருகி
ஞானச்சுடர் விள்க்கேற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்.

பூதத்தாழ்வார்

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேண் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பாள் இன்று.

பேயாழ்வார்

Comments