திருக்கோவிலூர் திவ்யதேசம்

திருக்கோவலூர் என அழைக்கப்படும் இந்த க்ஷேத்திரம், பஞ்ச க்ருஷ்ணாரணய க்ஷேத்திரங்களுள் ஒன்றாகும்.

கோபாலபுரம் மற்றும் கோபகிரி என்ற பெயர்களும் உண்டு.

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் எனப்படும் திராவிட வேதம் இங்கு தான் முதன் முதலில் முதலாழ்வார்களால் பாடப்பெற்று ஆரம்பிக்கப்பட்டதால், இந்த க்ஷேத்திரம் திவ்ய ப்ரபந்த அவதார ஸ்தலம் எனப்புகழ் பெற்றது.

108 வைணவ திவ்ய தேசங்களில் 41வது திவ்யதேசமாகும்.

நடு நாட்டு திவ்யதேசமுமாகும். இச்சன்னதியில் மூலவர் பெருமாள் த்ரிவிக்ரம (உலகளந்த) திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார்.

இந்த க்ஷேத்திரத்தில் பெருமாள்,முதலாழ்வார்கள் மற்றும் ம்ருகண்டு மகரிஷிக்கு ப்ரத்யக்ஷ்மாக த்ரிவிக்ரம திருக்கோலத்தில் ஸேவை கொடுத்துள்ளார்.

இத்திருக்கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.

Comments